இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், மாவட்ட காவல் துறையின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘முதலாம் ஆண்டு காவல்துறை கோப்பைக்கான’ மாபெரும் T-20 கிரிக்கெட் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு.P.விஷ்ணு சந்திரன்,IAS., அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில், இராமநாதபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து 32 அணியினர் பங்கேற்கின்றனர்.