சென்னை : சென்னை பெருநகர காவல் எழும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.P.பாபுராஜ் மற்றும் D2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் திருமதி.N.ஜம்புராணி அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது 2020 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்ற திரு.பாபுராஜ் அவர்கள் வேலூர் மாவட்டம் செடுவாலி கிராமத்தை சேர்ந்தவர் இவர் 1993 ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தவர். 26 வருடம் அனுபவம் மிக்கவர். இவரது மனைவி அண்ணா சாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திருமதி.N.ஜம்புராணி ஆவார். இவர் 1997ம் ஆண்டு காவல்துறையில் பணியை துவங்கியவர். தலைமை காவலர் திருமதி.N. ஜம்பு ராணி அவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். காவல்நிலையத்திற்கு புகார்களை தெரிவிக்க வரும் அனைவரிடமும் கனிவுடன் அணுகி, அதனை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பவர்.
இந்தக் காவல் தம்பதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காவல் சிறப்பு சார்பு உதவி ஆய்வாளர் திரு.பாபுராஜ் அவர்கள், நுங்கம்பாக்கம் உதவி ஆணையருக்கு ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சுமார் 15க்கும் மேற்பட்ட உதவி ஆணையருக்கு இவர் ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். இவர் பணியாற்றிய அனைத்து உதவி ஆணையர்களின் நன்மதிப்பை பெற்றவர். இவர் சிறந்த தடகள வீரர் ஆவார். மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
பதக்கம் பெற்ற திரு.பாபுராஜ் அவர்களுக்கு உடன் பணியாற்றும் காவலர்கள் உட்பட காவல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பதக்கம் பெற்ற காவலர் தம்பதிகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.R.ராஜா
மாநில பொது செயலாளர் – அரசியல் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.