விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள அகரம் சித்தாமூர் கிராமத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் நானும் எனது குழந்தைகளும் மூன்று வேளை சாப்பிடாமல் பட்டினியில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். உடனே மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறி அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி அவர் வீட்டுக்கே சென்று கொடுத்து நலம் விசாரித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இத்தகைய செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்