திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகள் பற்றிய காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹாக் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா மாவட்ட மனநல திட்ட மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் வரவேற்றார் , காவலர் நிறை வாழ்வு பயிற்சி பயிற்றுனர் Si ராஜீவ்காந்தி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தொகுத்து வழங்கினார். மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு பள்ளி மாணவர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி