சேலம் : சேலம் கடந்த (19.5.2023), முதல் (21/5/2023),வரை திருவண்ணாமலையில் ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் காவல்துறை இயக்குனர், ஊர்க்காவல் படை வீரர்கள், தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையினர் Squad Drill மற்றும் Arms Drill ஆகிய கவாத்து போட்டி மற்றும் ஒட்டுமொத்தமாகவும் இரண்டாம் இடம் பிடித்தனர். கவாத்துப் போட்டிகளில் 36 ஊர் காவல் படையினர் மற்றும் ஒரு படை தளபதி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் 16 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் திரு.ஜெயபிரகாஷ் HG 390 இரண்டாம் இடமும் 4×400 Relay திரு.சதீஷ்குமார் HG 419 இரண்டாம் இடமும் பிடித்தனர் மேற்படி போட்டிகளில் வென்றவர்களை இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேரில் சந்தித்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் திரு.கென்னடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம், திரு. சுப்பிரமணி காவல்துறை கண்காணிப்பாளர் ஆயுதப்படை, திரு.மகா அஜய் பிரசாத் சரக தளபதி, திரு.தனசேகர் மண்டல தளபதி மற்றும் திருமதி.தீக்ஷிதா, துணை மண்டல தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்