மதுரை புதூரைச் சேர்ந்தவர் சக்தி கிரிதரன், இவர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் பின்புறம் அவரது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம் எதிர்பாராதவிதமாக அருகில் வந்த காளை மாடு ஒன்று சக்தி கிரிதரன் வலது பக்க தொடையில் குத்தியதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது, இதனால் அவர் மயக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை காவலர் திரு.முத்து, காவலர் திரு.சிவா ஆகிய இருவரும் பக்தர்களுடன் இணைந்து, காயம் பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சுமை தூக்கும் (டோலி) பணியாளர்கள் மூலம் மீட்டு காயம்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை