திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழையினால் நிலச்சரிவு மற்றும் காற்றினால் மரங்கள் போன்றவைகள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் உயர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பேரிடர் மீட்புக்குழு(TNDRF) ஒரு ஆய்வாளர் உட்பட 39 போலீசார்கள் வரவழைக்கப்பட்டு கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் காற்றில் சாய்ந்த மரங்கள் போன்றவற்றை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.