திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின்படி பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினருடன் இணைந்து சுற்றுவட்டார பொதுமக்களும் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குளத்தை தூர்வாருவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைகளும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் காவல்துறை மக்களுடன் இணைந்து சமூக பணிகளை செய்து வருகிறனர்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த காவல்துறையின் இச்செயலை சுற்றுவட்டார பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.