தேனி: கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு சாலை ஒன்பதாவது வளைவு பகுதியில் இன்று பெய்த பலத்த மழையின் காரணமாக மரம் விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் உத்தமபாளையம் உட்கோட்ட DSP திரு.சின்னகண்ணு அவர்கள் தலைமையில் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் மற்றும் போலீசார்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.