திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி ராமர்பிள்ளை தோட்டம், பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஓடைக்குமார் என்பவரை கடந்த 2 தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் சராமாறியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது இதுகுறித்து நகர் தெற்கு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் எஸ்பி.திரு. பாஸ்கரன், உத்தரவின் பேரில் டிஎஸ்பி. கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் திரு.கணேசன், திரு.ரவிசங்கர் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சக்திவேல், காவலர்களலால், ராமச்சந்திரன், ஜோசப், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பிள்ளமநாயக்கன்பட்டியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த மாதவன், விக்னேஷ், கார்த்தி, பிரவீன், சேகர் உட்பட 6 பேரை சினிமா பாணியில் நள்ளிரவில் சுற்றி வளைத்து வீட்டின் உள்ளே சென்று கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.