செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழவேலி. பைபாஸ் சாலையில் சுற்றித்திரிந்த . மன நலம் பாதிக்கப்பட்ட வரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் முரளி குமார் மற்றும் ராஜாமணி உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் மன நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கார்த்திக் வயது (28). தந்தை பெயர் ஆறுமுகம் சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் இவரை காவலர்கள் விசாரித்து பசியோடு இருந்தவருக்கு உணவு வாங்கி கொடுத்து அவரது தந்தையை கண்டுபிடித்து சென்னையில் இருந்து வரவழைத்து ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்குள்ள பொதுமக்கள் காவலர்களின் இச்செயலை மிகவும் பாராட்டியதோடு சிறந்த காவலர்கள் என்றும் மிக விமர்சையாக பாராட்டினார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்