நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் வாரத்தின் ஏழு நாட்களும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள் இந்தவகையில் வயது முதிர்ந்தோர் மற்றும் கை குழந்தையுள்ளோர் ஆகியோர் படிக்கட்டு ஏறத்தேவையில்லை எனவும் அவர்களை பார்வையாளர்கள் அறையிலே சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள்.
இதனால் நேற்று (11.11.2019) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திப்பதற்கு வந்த வயது முதிர்ந்த தம்பதிகளின் குறைகளை முதல் தளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அறையில் இருந்து தரை தளத்தில் உள்ள பார்வையாளர் அறைக்கே வந்து முதியோர்களின் குறைகளை மனிதநேயத்தோடு கேட்டறிந்தார்கள்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இத்தகைய மனித நேயமிக்க செயலுக்கு காவல் .அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்