சென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா, தமிழ் நாடு பொது செயலாளர் – அரசியல் பிரிவு திரு.ராஜா, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை யிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று காவல்துறையினருக்கு காவலர் தினத்திற்கு பொன்னாடை, கேக் மற்றும் சாக்லெட் உள்ளிட்ட இனிப்புகள் வழங்கி உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
காவலர் தின வாழ்த்து தெரிவித்த அனைத்து காவல்துறையினரும், தங்களுக்காக காவலர்கள் தினம் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் காவலர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன், இனிப்புகள் வழங்கியும், மரக்கன்று நட்டும், காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும், காவல்துறையினருக்கு பயனுள்ள வருட நாட்காட்டி(Police News Plus Calendar)) வழங்கியும், வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டியும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.