மதுரை : மதுரை மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் ஐ.பி.எஸ் ., அவர்கள், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் நடப்பு 2019 ஆம் ஆண்டு அளித்த புகார்களுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டி, மதுரை மாவட்டத்தில் இந்த முகாம் நடைபெற்றது.
இதன்படி மேலூர் உட்கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் (புகார் மேளாவில்) கலந்துகொண்டு, கொடுத்த புகார் மனுவிற்கு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின், மேற்பார்வையில் உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி, வனிதா, காவல் துணை கண்காணிப்பாளர், திரு. சுபாஷ், காவல் ஆய்வாளர் திரு. தெய்வீக பாண்டியன், திரு, நடேசன், மற்றும் மேலூர் உட்கோட்ட போலீசார் கலந்து கொண்டு, வரப்பெற்ற புகார் மனுக்களுக்கு உடனடியாக விசாரணை நடைபெற்றது.
மேலூர் புகார் மேளாவில் உடனடி தீர்வு கிடைத்தது தொடர்ந்து, மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை