மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது இதுவரை 13,204 வழக்குகள் பதிவு செய்தும்,வழக்கில் சம்பந்தப்பட்ட 17,731 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து *6,731 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று 11.5.2020 ம் தேதி மட்டும் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது 217 வழக்குகள் பதிவு செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட 313 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு குற்றங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று 1 வழக்கு பதிவு செய்யபட்டு வழக்கில் சம்பந்தபட்ட 1 நபர் கைது செய்யபட்டு அவரிடமிருந்து 9 லிட்டர் கள்ளை, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.