மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்கள் மேலூர் பேருந்து நிலைய பகுதிகளில் கிருமி நாசினி மருந்தை தெளித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும், ஒத்தக்கடை பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் கொரோனா வைரஸ் நிவாரண நிதி வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை சரியாக கடை பிடிக்கிறார்களா என சோதனை செய்து, எங்கு சென்றாலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.