மதுரை: மதுரை மாநகர காவல்துறையினர் பணிநிமித்தம் காரணமாக குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆதலால் காவலர்கள் குடும்பத்தினரும் சில நேரங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே காவலர்களின் மனநலன் மற்றும் குடும்பநலன் கருதி “ஆனந்தம்” எனும் திட்டத்தை இன்று மாலை மதுரை Fortune Pandian Hotel –ல் உள்ள கருத்தரங்கு கூடத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் அவர்கள் காவலர்கள் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், குடும்ப ஆரோக்கியம் மற்றும் எப்போதும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் Dr.ஆனி விஜயா இ.கா.ப., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு,மணிவண்ணன் இ.கா,ப., அண்ணாநகர் (ச&ஒ) காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் மார்டின் (Nodal Officer Anandam) Dr.C. R. Ramasubramanian, (State Nodal Officer TN PWB), Dr.கண்ணன் (Asst. Nodal Officer TN PWB), அமெரிக்கன் கல்லூரி முதல்வர் Dr.தவமணி கிறிஸ்டோபர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் Dr.மனோகர், மதுரை சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் Dr.நிஷாந்த் மற்றும் பாத்திமா கல்லூரி முதல்வர் Sr. செலீன் சகாய மேரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த “ஆனந்தம்” திட்டத்தை மதுரை மாநகர காவல்துறை, எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் பெருமாடிக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மதுரை கல்லூரி, E.M.G.யாதவா கல்லூரி, மன்னர் திருமலை கல்லூரி மற்றும் மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கீழ்க்கண்ட பணிகளை காவலர் குடும்பத்திற்காக தொடர்ந்து மேற்கொள்ள உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை