மதுரை : மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (35), இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில், இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருநகர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து செல்வகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச பேச்சு,தட்டி கேட்டவருக்கு கத்திக்குத்து!
முல்லை நகர் முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பை சேர்ந்தவர் இளையராஜா (42), முல்லை நகர் ராஜீவ் காந்தி நகரில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அந்த திருவிழாவில் பீபி குளம் நேதாஜி மெயின் ரோடை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் ஜோதி பாசு (19) ,முல்லை நகர் முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கணேசன் 20, அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் பொன் பாண்டி (21), மூவரும் சத்தமாக ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை இளையராஜா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அவரைத் தாக்கி கத்தியால் குத்திவிட்டனர். இந்த சம்பவம் குறித்து இளையராஜா கொடுத்த புகாரில் தல்லாகுளம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரை கத்தியால் குத்திய மூன்று பேரையும் கைது செய்தனர்.
ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த, நான்கு பேர் கைது!
கே. புதூர் செம்பக்குளம், பொதுக்களிப்பறையில் ஆயுதங்களுடன் சந்தேகப்படும்படியாக கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக கீழ போது காவல்துறையினர்ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சுற்றி வளைத்து நான்கு பேரை பிடித்தனர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலகுமார் என்ற தவளை பாலா லாரன்ஸ் சந்துரு என்ற கபாலி தங்கபாண்டி என்று தெரியவந்தது அவர்களை கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு வாழை பறிமுதல் செய்தனர். முகமது ரியாஸ் என்பவர் தப்பி ஓடிவிட்டார் அவரை தேடி வருகின்றனர் புதிய பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்தில் வழங்கி இருப்பது தெரிய வந்தது மேலும் இது குறித்து தொடர்ந்து காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு, ஆசாமிகள் கைவரிசை!
திருப்பரங்குன்றம் சாலையில், நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 3பவுன் செயின் பறித்த ஆசாமிகளை காவல்துறையினர், தேடி வருகின்றனர். எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரூபா தேவி 60. இவர் திருப்பரங்குன்றம்ரோடு ராமலிங்கநகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று ஆசாமிகள் அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ரூபாதேவி சுப்பிரமணியபுரம் காவல்துறையில், புகார் செய்தார். காவல்துறையினர்,வழக்கு பதிவு செய்து செயின்பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி