மதுரை : அவனியாபுரம் மீனாட்சி நகர் எம்ஜிஆர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் தங்கப்பாண்டி (24), இவர் சம்பவத்தன்று இரவு ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தொடந்து வாந்தி ஏற்பட்டது. மயக்கமும் ஏற்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிவாலிபர் தங்கபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய அப்பா சந்திரசேகர் அவனியாபுரம் காவல் துறையில், புகார் செய்தார். காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தை வருகின்றனர்.
கண்மாய்க்குள், பதுங்கி இருந்த கும்பல் கைது!
தல்லாகுளம்கவால் உதவி ஆய்வாளர் திரு. முருகன், இவர்காவல் துறையிருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பனங்குளம் கண்மாய் அருகே சென்ற போது கும்பல் ஒன்று காவல் துறையினரை கண்டதும் பதுங்கியது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களிடம் விசாரணை நடத்தினார் .விசாரணையில் அவர்கள் திருப்பரங்குன்றம் வடக்கு ரத வீதி ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (20), திருப்பரங்குன்றம் சாமி பிள்ளை தெரு முருகன் மகன் தர்மா (30), திருப்பரங்குன்றம் கூடமலை தெரு பாலாஜி மகன் நாகராஜன் (21) என்று தெரியவந்தது.
அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் முதுகின் பின்புறம் வாள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தார். அவர்கள் எதற்காக அங்கே பதுங்கி இருந்தனர் என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனாட்சி சிலை திருட்டு, மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு!
மதுரை கே.புதூர் மண்மலை மெயின் ரோட்டில் மண்மலை கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு மீனாட்சி சிலை வைக்கப்பட்டு தினமும் பூஜை செய்து வந்தனர். இந்த நிலையில் வழக்கம்போல் அதிகாலை பூஜை செய்ய சென்றபோது கோயிலில் வைக்கப்பட்டிருந்த மீனாட்சி சிலையை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டது தெரியவந்தது .இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகி மணிகண்டன் கே. புதூர் காவல் துறையில், புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
விளாச்சேரியில் விபத்து, வாலிபர் பலி!
விளாச்சேரி சேவுகர்தெரு சுப்பையா மகன் மருதுபாண்டி (27), இவர் விளாச்சேரி ராயப்பன் நகர் ரோடு சந்திப்பில் பைக்கில், சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த மாநகராட்சிலாரி மீது மோதி விபத்தானது. இதில் தூக்கி வீசப்பட்ட மருதுபாண்டிக்கு தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தந்தை சுப்பையா போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி