மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (12.12.19) அனைத்து மகளிர் தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் மதுரை சொக்கிகுளம், ஜமால் தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு சாந்தோம் கல்வி மற்றும் அறக்கட்டளையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைகள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்துதல்களிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி அதன் பயன்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.மேலும் POCSO சட்டம், EVE TEASING பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்பணர்வு பற்றியும் விளக்கம் கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் 100 – க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை