மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கேரள மாநிலம் தைக்கூடம் விட்டிலாவைச் சேர்ந்த, தற்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா மண்னாடிமங்கம் கள்ளான்காடுவில் வசித்து வரும் கார்த்தி 19, த/பெ பாபு என்பவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO ACT) படி வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு 5 வயது சிறுமியை மிரட்டியும் பாலியல் துன்புறுத்தல் செய்த மேற்படி எதிரி கார்த்திக் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிபாரிசு செய்ததின்பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 13.05.2023-ம் தேதி மேற்படி நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பேரில் மேற்படி எதிரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்