மதுரை: மதுரை, மேலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது தும்பைபட்டி பெரிய ஓடையில் 3 டிப்பர் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த அஜ்மீர் காஜா, முத்துராசு, ரமேஷ் , கார்த்திக் குமார் ஆகியோர்களிடமிருந்து மணல் மற்றும் 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
கீழவளவு காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது தனியாமங்கலம் அருகே தக்க அனுமதியின்றி மணலுடன் வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மீரா ஹூசைன் , அய்யாவு ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
சேடபட்டி காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது சிவனதபுரம் கண்மாயில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய தங்கவேல் 30 முருகன் ஆகிய நபர்களிடம் இருந்து மணல் மற்றும் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேற்கண்ட காவல் நிலையங்களில் மேற்படி நபர்கள் மீது MMDR ACT படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை