திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.வரதராஜுலு IPS அவர்களின் உத்தரவின் பேரில் , திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் IPS அவர்களின் ஆணைக்கிணங்க , திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS அவர்களின் மேற்பார்வையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் சரகம் பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மணப்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குத்தாலிங்கம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
அதன்படி பொது மக்களை திசைதிருப்பி திருடும் கும்பல் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி பகுதிகளில் வங்கியில் பணம் எடுக்கும் வயதானவர்கள் மற்றும் பெண்களை குறி வைத்து பணத்தை திருடியது தொடர்பாக 26.11.19 ஆம் தேதி மணப்பாறை காவல் ஆய்வாளர் திரு கண்ணதாசன் அவர்கள் காவல்துறையினருடன் அதிகாலை சுமார் 03.30 மணிக்கு ரோந்து அலுவலில் இருந்த போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு நபர்களை பிடித்து விசாரிக்கையில் அவர்கள் மணப்பாறை டவுன் பகுதியிலும் துவரங்குறிச்சி பகுதியிலும் மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதியிலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு பிடிபடாமல் இருந்துள்ளனர். குற்றப்பிரிவு போலீசாரால் மேற்படி நான்கு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் ரூபாய் 3,10,000/- மும், 4 செல்போன்கள் மற்றும் அவர்கள் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த இரு மாதங்களில் மட்டும் மணப்பாறை உட்கோட்ட தனிப்படையினரால் மணப்பாறை உட்கோட்டத்தில் 8 ற்கும் மேற்பட்ட செயின் பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சுமார் 8 லட்சம் மதிப்புள்ள களவுபோன பணம் நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.வரதராஜுலு IPS அவர்கள், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் IPS அவர்கள்,மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS அவர்களும் மணப்பறை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை வெகுவாக பாராட்டினார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி