திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு (09.01.2020 ) பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகின்றனர். இதையடுத்து பழனியில் செயல்படும் த.சி.கா 14-ம் அணியில் உள்ள சிறப்பு படை காவலர்கள் திண்டுக்கல் பழநி சாலையில் பக்தர்களாக ஏற்படுத்தப்பட்ட நடைபாதையில் பக்தர்களின் வசதிக்காக பாதையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இப்பணியில் சிறப்பு காவல் படையை சேர்ந்த 7 உதவி ஆய்வாளர்களும், 87 காவலர்களும் ஈடுபட்டனர். காவலர்களின் இச்சேவையை பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா