சென்னை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எல்லைகள் மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டம் மிக நெடியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் பாதித்தோரின் எண்ணிக்கை கூடலாம். ஒருவருக்கொருவர் உதவுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துவருவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் உண்மையான தேசப்பற்று.
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக அன்றாடம் தமிழகம் எங்கும் உள்ள குடியுரிமை நிருபர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. பொது மக்களுக்கு மட்டுமல்லாது, காவல்துறையினருக்கும் தேவையான முக கவசங்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக சார்பில் உணவு சமைக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்று வழங்கப்படுகிறது.
உணவு இல்லாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 250 நடுத்தர வர்க்க மக்களுக்கும் 09.04.2020 அன்று மதிய உணவாக வெஜிடபிள் சாதம், ஊறுகாய் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
மக்கள் பணி செய்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இதுபோன்ற சமூகப் பணிகளை இரவு பகலாக செய்து வருகின்றனர். சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.மூசா செய்யும் தன்னிகரற்ற சமூக சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.