கோவை: நம் நாட்டை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொடிய கொரோனா வைரஸ். உலகையே உலுக்கிய வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி எனும் கொரோனாவுக்கு என எதிரான போரில், போர் வீரர்களாக தங்கள் உயிர்களை கூட பெரிதாக எண்ணாமல் களத்தில் போராடுபவர்கள் நமது காவலர்கள்.
இரவு பகலாக உழைக்கும் காவல்துறையினர் மற்றும் பல்வேறு அரசுத் துறையினரின் பங்கும் அளவிட முடியாது. இப்போது இவர்கள் தான் கொரோனாவின் பிடியிலிருந்து நம்மை காக்கப் போகும் நிஜமான மனிதநேய மிக்க மனிதர்கள் என்றால் கூட அது மிகையாகாது. காவலர்களின் தன்னலமற்ற இந்த தியாக சேவையை நம் குடிமக்கள் யாவரும் போற்றி புகழ வேண்டிய நேரமிது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவுப்படி 144 ஊரடங்கு தடை உத்தரவு தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. கொரோனோ தொற்றால் நாடே ஊரடங்கில் இருக்கும் போது, மக்களுக்காக வெளியே வேலை செய்யும் நம் காவலர்கள் நலனுக்காக போலீஸ் நியூஸ் பிளஸ் மாவட்டம் தோறும் உள்ள குடியுரிமை நிருபர்கள் மூலம் காவலர்களுக்கு உணவு, குளிர் பானங்கள், முக கவசங்கள், கை கழுவ சேனிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கி வருகின்றது.
காவல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தீவிரமாக செயல்பட்டு உள்ளனர். உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், காவல்துறையினர் முதல் பொதுமக்கள் அனைவரும் உணவிற்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உரிய நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் கோவை மாவட்ட நிருபரும், நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் கோவை மாவட்ட பொது செயலாளர் (பொதுக்குழு) திரு.கோகுல் அவர்கள் இன்று சுமார் 300 காவலர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கினார். கோவை மாவட்டத்தை சேர்ந்த திரு.கோகுல் அவர்கள் பல ஆண்டுகளாக காவல் துறையினருக்கு செய்தி வழங்குவதோடு மட்டுமல்லாது, காவலர் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தின் சுற்று வட்டாரப்பகுதிகளில் மற்றும் சோதனை சாவடிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டன. இதனை கண்ட காவலர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மதிய உணவை பெற்றுக் கொண்டனர்.
உணவு வழங்க மதுவிலக்கு ஆய்வாளர் பிரிவு திரு.கந்தசாமி மற்றும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.முருகசாமி ஆகியோர் மிகுந்த அலுவலக பணிகளுக்கிடையே, நேரம் ஓதுக்கி காவலர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர்கள் கூறுகையில், தன் இத்தனை வருட பணி காவலத்தில், இன்று அவர் மனம் அடைந்த தன்னிறைவு போல் என்றும் இல்லை, என்று கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.முருகசாமி அவர்கள் கூறுகையில், காவலர்கள் பசியாற உணவு அளிப்பது, மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
மேலும் தன்னார்வலர்கள் திரு.மோகன் குமார் மற்றும் திரு.கௌதம் உடன் இருந்தனர்.