சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு, பகல் பாராமல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாகவும், பிரஜோஷ் சாரிட்டி சார்பாகவும் உணவு குடிநீர் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,பொது மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் இரவு பகல் பாராமல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சென்னை அண்ணாநகர் K3 காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளருக்கும், சாலையில் சட்டம் ஒழுங்கு பணியிலிருந்த காவல் துறையினருக்கும்,துப்புரவு தொழிலாளர்களுக்கும், சாணிடைசர், உணவு ,குடிநீர் மற்றும் முக கவசங்கள் போன்றவை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் (சமூக சேவை) திரு.ஸ்டீபன் அவர்களால் வழங்கப்பட்டது.
கொரோனா பரவலை சாதகமாக பயன்படுத்தி சில நிறுவனங்கள் முகமூடிகளை அதிக விலைக்கு விற்கும் நிலையில், திரு.ஸ்டீபன் அவர்களின் இந்த சேவை அண்ணா நகர் காவலர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. சென்னையில் மருத்துவ முக கவசங்களை வாங்க முடியாமல் சிரமபடுவோருக்கு அவர்களை தேடிச் சென்று முக கவசங்களை அளித்து வருகிறார்.
இதில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தமிழ் நாடு வடக்கு மண்டல தலைவியும், பிரஜோஷ் சாரிட்டியின் நிறுவனரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான டாக்டர். ஈவ்லின் இதன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.