சென்னை : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (07.01.2024) மற்றும் (09.01.2024_ அன்று வளசரவாக்கம்,விருகம்பாக்கம், டிடிகே ராதா கிருஷ்ணன் சாலை மற்றும் ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும் திருவல்லிக்கேணி ரயில் நிலையங்களிலும் உள்ள ஆதரவற்ற மக்கள், மாற்று திறனாளிகள்,துப்புறவு தொழிலாளர்களுக்கும் மற்றும் வீடுகளின்றி சாலையோரம் படுத்து இருந்த ஏழை எளிய மக்களுக்கும் குளிருக்கு பயனளிக்கும் விதமாக 400 போர்வைகள் வழங்கப்பட்டது. இதனுடன் பிஸ்கட் பாக்கெட்டுகளும் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்ன சிறப்பு அழைப்பாளராக வளசரவாக்கம் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு முகமது பரகத்துல்லா அவர்கள் கலந்துகொண்டு, சாலையோரம் வசிக்ககூடிய ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் போர்வைகள் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினார். தமிழக காவல்துறையினரின் பணி மிகவும் இன்றியமையாதது. நம் கொண்டாடிய பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளை பாதுகாப்புடன் நம் குடும்பத்துடன் கொண்டாட காவல்துறையினர் நமக்கு அளித்த பாதுகாப்பு பாராட்டுதலுக்கு உரியது.
வளசரவாக்கம் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு முகமது பரகத்துல்லா அவர்கள் போலீஸ் நியூஸ் பிளஸ் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, இன்முகத்துடன் பசித்தோருக்கு உணவு அளித்து மகிழ்ந்தார். (7-1-2024 திங்கள் கிழமை இரவு சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி பஸ் டிப்போ, அரும்பாக்கம், கோயம்பேடு ரவுண்டானா, போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளிகள், துப்புறவு தொழிலாளர்களுக்கும் மற்றும் வீடுகளின்றி சாலையோரம் படுத்து இருந்த ஏழை எளிய மக்களுக்கும் குளிருக்கு பயனளிக்கும் விதமாக 300 போர்வைகளையும், 200 பிஸ்கட் பாக்கெட்டுகளும் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டது. (9-1-2024) சென்னையில் டிடிகே ராதா கிருஷ்ணன் சாலை மற்றும் ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும் திருவல்லிக்கேணி ரயில் நிலையங்களிலும் மழையின் காரணமாக வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும் . முதியோர்களுக்கும், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் என 100 நபர்களுக்கு பிரட் பாக்கெட் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. அ. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின்படி, சமூக சேவை பிரிவு வடக்கு மண்டல பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.