நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உறவினர்களால் கைவிடப்பட்ட, முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக ராயில்லா நகர் சரகம் காவல் உதவி ஆணையர் திரு.கௌதமன் அவர்கள் கலந்து கொண்டு (20.10.2022) வியாழக்கிழமை . சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அறுசுவை மதிய உணவு மற்றும் அவர்கள் உபயோகப்படுத்தும் உடைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் உதவி ஆணையர் திரு.கௌதமன்உற்சாகத்துடன் கலந்து கொண்டு முதியோருக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார். மிகுந்த பணி சிரமங்களுக்கு இடையே, முதியவர்களுக்கு ஆதரவாக காவல்துறை என்றும் துணை நிற்கும் என்ற கோட்பாட்டினை வலியுறுத்தும் விதமாக காவல் உதவி ஆணையர் திரு.கௌதமன் முதியோர்களுக்கு இன்முகத்துடன் அரவணைத்து உணவு வழங்கியதுடன், அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் நைட்டி வழங்கினார்.
காவல் உதவி ஆணையர் திரு.கௌதமன் பொதுமக்களை அணுகும் முறை, குற்றங்களை விசாரிக்கும் முறை, சக காவலர்களை அரவணைத்து செல்லும் முறை குறித்து குறித்து அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர்.