திருவள்ளூர்: காவலர், மருத்துவர், தூய்மை பேணுவோர் அனைவரது சேவையும் இந்த வேளையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நினைவில் கொண்டு நெஞ்சார வாழ்த்த வேண்டிய செயலாகும்.
உயிரைக் கொள்ளும் கண்ணுக்கு தெரியாத விஷக் கிருமிகளை விட அவற்றில் இருந்து மக்களை பாதுக்காக்க பணி செய்யும் காவலர் பணி சிறப்பானது. அவர்களுக்கு உரிய நேரத்திற்கு உணவு அளிப்பது குடிமக்களாகிய நமது கடமை.
காவலர் பணி என்றாலே சிரமமான பணி. அதிலும் தற்போது காவலர்களுக்கு கொடுத்திற்கும் பணி, 144 தடை உத்தரவு காரணமாக, பொது மக்களை வெளியில் அனுமதிக்காமல், கூட்டம் கூடாமல், அடக்க வேண்டும். அனைத்து கடைகளும், உணவகங்களும் அடைப்பு. இதன் காரணமாக அனேக காவலர்களுக்கு உணவு சரியான நேரத்தில் கிடைப்பதில்லை.
இதனை கருத்தில் கொண்டு நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் பிரஜோஷ் சாரிட்டி சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் சட்டம், ஒழுங்கு பணியிலிருந்த காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையை சார்ந்த பெண் காவலர்களுக்கு, சாணிடைசர் மற்றும் உணவு, குடிநீர் போன்றவை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல தலைவியும், பிரஜோஷ் சாரிட்டியின் நிறுவனரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான டாக்டர். ஈவ்லின் அவர்களால் வழங்கப்பட்டது. உணவை பெற்று கொண்ட ஆண் காவலர்களும், பெண் காவலர்களும் உணவினை பெற்று கொண்டு, பசியாறி, மனதார வாழ்த்தினார்கள்.
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல தலைவி .டாக்டர். ஈவ்லின் அவர்கள், பல ஆண்டுகளாக திருவள்ளூர் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கி, சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர். மனிதநேயத்தின் அருமை மனிதனின் பெருமை என்ற பொன் சொல்லின் நிமித்தமும் மான் போல ஓடி மக்களுக்கு சேவையும் தேனீக்கள் எப்படி தேனை தேடுவது போல் இவர் இல்லாதவர்களை தேடிப்போய் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் வரும் திருமதி.ஈவ்லின்அவர்களை பாராட்டுகிறோம்.
இதில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சென்னை மண்டல தலைவர் திரு.ஸ்டீபன், திருவள்ளூர் முரசு செய்தி பத்திரிகையாளர் திரு.முருகன் ஆகியோர் இதன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.