தென்காசி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை மிக வேகமாக பரவிவரும் இவ்வேளையில். இன்று ஒரே நாளில் பல பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை நோயில் இருந்து மக்களை காக்க கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டிகள் போலீஸ் நியூஸ் சார்பாக ஒட்டப்பட்டது், அதில் எவ்வாறு கொரோனாவில் இருந்து எப்படி பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்ற விபரம் அச்சிடப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும், பேரூராட்சிகளிலும், ஊராட்சிகளிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது்.
போலீஸ் நியூஸ் பிளஸ் வாயிலாக குடியுரிமை நிருபர்கள் ஆழ்வான்துலூக்கன்பட்டியில் கொரோனாவை தடுப்பது எப்படி என்ற விழிப்புணர்வு சுவரொட்டியை ஒட்டும்போது, அவ்விடத்துக்கு ரோந்து வந்த கடையம் உதவி ஆய்வாளர் அவர்கள் திரு. தமிழரசன் அவர்கள் நமது சுவரொட்டியை பார்த்து அருமையாக உள்ளது எங்களுக்கு கிடைக்குமா கடையம் பஜார் பகுதியில் ஒட்ட வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
உடனே போலீஸ் நியூஸ் குடியுரிமை நிருபர் காபிரியேல் சுவரொட்டியினை பாதி கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட உதவி ஆய்வாளர் அவர்கள் மகிழ்வோடு இந்த நற்பணியை பாராட்டிப் சென்றார். மேலும் பல காவலர்கள் மற்றும் பொது மக்களும் விழிப்புணர்வு சுவரொட்டி பணியை பாராட்டினார்கள்.
தென்காசி மாவட்ட மக்கள் நமது செய்தியாளர்க்கு கொடுத்த சிறப்பு பேட்டியில், காவல்துறையை பற்றி அவர்கள் கூறியதாவது நெருக்கடி காலக்கட்டத்தில், காவல்துறையில் பணி புரியும் காவலர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் நடந்து வருகிறார்கள்.
தென்காசியில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக எல்லா தாலுகாவிலும், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, எங்களை பாதுகாத்துக் வருகின்றார். அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்து உள்ளர். அவர் உத்தரவின்படி எல்லா காவலர்களும் முழுமனதுடன் செயலாற்றி வருகின்றனர். எங்கள் காவல் சொந்தங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் என்று கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபரும், நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் முனைவர் ஞா. ஜோசப் அருண் குமார் மற்றும்அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், மக்களுக்காக சிறப்பாக சமுக சேவை பணியினை செய்து வருகின்றனர். இந்த நற்பணியில் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நல்ல உள்ளம் கொண்ட காவல் துறை நண்பர் ஆலங்குளம் G.R. Traders உரிமையாளர் திரு.கு.கணேசன் அவர்களுக்கு இது போன்ற பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டுவருது வெகுவாக பாராட்டுதலுக்குரியது.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மிகப்பெரிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளித்துள்ளது. இதற்க்காக பணியாற்றிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் ராஜா, சிவா, காபிரியேல், ரஞ்சித், பீட்டர், ரமேஷ், குமார் சங்கர், அபிலாஷ் பிரபு, ஜேக்கப் மற்றும் அனைத்து குடியுரிமை நிருபர்களுக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.