திருவள்ளூர் : உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய செய்தியை அறிந்ததும் நாம் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டோம். நோயின் நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும். தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய் தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு. “நோயுடனே வாழ பழகிக் கொள்வோம்” என்று அரசு தரப்பு இப்போது கூறியுள்ளது.
ஆனால் நமது உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதன் மூலம், கொரானா நோய் மட்டுமல்லாது, அனைத்து தொற்று நோயிலிருந்தும் நம்மை தற்காத்து கொள்ள முடியும். கபசுர குடிநீர் என்பது. நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்க தரப்படும் சித்த மரபு மருந்து. சளி. இருமல். காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்த. சித்தாவில் இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
சளி. இருமல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள்தான் கொரோனா வைரஸ் பாதிப்பிலும் தெரியவருகின்றன. அதனால், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவோ அல்லது அதற்கு மருந்தாகவோ கபசுர குடிநீரைத் தரலாம் என்று நம் தமிழ் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் பிரஜோஷ் சாரிட்டி சார்பாக திருவள்ளூர் மாவட்ட கம்பர் தெருவில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை திருவள்ளூர் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் தலைமையில் வழங்கப்பட்டது. கம்பர் தெரு வாலிபர்கள் வேப்பிலை தோரணம் கட்டி, தெரு முழுவதும் மஞ்சள் நீர் தெளித்து சுத்தம் செய்தனர். பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் நிறுவனரும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல தலைவர் டாக்டர்.ஈவ்லின் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். திருமதி. ஈவ்லின் அவர்கள் அப்பகுதியில், சிறந்த சமூக சேவகியாக பல்வேறு சமூக நல திட்டங்களை திறம்பட செய்து அப்பகுதி மக்களின் அன்பை பெற்றுள்ளார்.
இதில் திருவள்ளுவர் தமிழ் முரசு பத்திரிக்கையாளர் திரு.முருகன், தன்னார்வலர்கள் யுவராஜ், லோகேஷ், ஜஸ்வந்த், ஜஸ்டஸ், சஞ்சய், சதீஷ், பிரித்திவிராஜ், அருண் உட்பட பலர் கலந்து கொண்டு அங்குள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.