சென்னை: உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தடுப்பு பணிகளில் மருத்துவம், சுகாதாரம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சித்த மருத்துவத்தில், கபசுரக் குடிநீர் பன்னெடுங்காலமாக சளி, இருமலுடன் கூடிய சுவாச நோய்த்தொற்றுக்குக் குழந்தைகள் முதல் பெரியோர்வரை பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இது சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த மூலிகை மருந்து. கபசுரக் குடிநீரானது சுவாசநோய் அறிகுறிகளைக் கட்டுக்குள் கொணர்ந்து, நோய்த் தடுப்பாற்றலை அதிகரித்து, உடலுக்கு உறுதியளிக்கவல்லது. இதில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகாரம், முள்ளி வேர், கடுக்காய்த் தோல், ஆடாதோடை, கற்பூரவல்லி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறுதேக்கு, கோரைக்கிழங்கு, வட்டத்திருப்பு, நிலவேம்புச் சமூலம் – எனப் பதினைந்து மூலிகைகள் அடங்கியுள்ளன.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக பாரதிதாசன் நகர் கம்பர் 2வது குறுக்கு தெரு ஆலப்பாக்கம் மதுரவாயல் பகுதியில் வசிக்கும் 300. நபருக்கு மக்களுக்கு, வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவுறுத்தலின் படி சித்த மருந்து- கபசுரக் குடிநீர் போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திரு. கோவிந்த ராஜ் அவர்கள் வருகை தந்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. காவல் ஆய்வாளர் திரு.கோவிந்த ராஜ் அவர்கள் அங்கு வந்த பொதுமக்களிடம், கொரானா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தனி நபர் இடைவெளி குறித்தும், முக கவசம், கிருமி நாசினி கையாளுவது குறித்தும் விளக்கி கூறினார். அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக மனமார்ந்த நன்றி.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் சித்த மருந்து- கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி பொது மக்கள் ஒருவருக்கொருவர் உரசாமல் தூரத்தை பேணு மாறும், கைகளில் சுத்திகரிப்பு திரவத்தை உபயோக்கும் முறைகளையும் மற்றும் தொற்றுநோய் பரவாமல் இருக்க மூக்கினை மறைக்கும் கவசம் பயன்படுத்தும் முறைகளையும் அறிவுறுத்தப்பட்டது.