திருவள்ளூர்: தற்போது இருக்கக்கூடிய சூழலில் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் இல்லத்தில் நலமா இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் காவலர்கள் உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி, தவித்து வருகிறார்கள். தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள குறைந்தபட்சம் தேனீர் கூட கிடைக்கவில்லை. காரணம் தமிழ்நாட்டில் அனைத்து தேநீர் கடைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள தேனீர் கூட கிடைக்காமல், மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே.
தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தே(யிலை)+நீர்= தேநீர்
நீருக்கு அடுத்தபடியாக அதிகம் அருந்தப்படுவது தேநீரே என்று கூறப்படுகின்றது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூரை சுற்றி மணவாளனகர், மேல்நல்லாதூர், ஆயில் மில், காக்களூர், ஈக்காடு, திருவள்ளூர் பஸ் நிலையம், திருவள்ளூர் காமராஜர் சிலை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் பொன்னேரி மற்றும் ரெட்டில்ஸ் ரோடு ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கும் டீ, பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இதை சிறந்த முறையில் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு. பக்தவத்சலம் அவர்கள் வழங்கினார். திரு.பக்தவச்சலம் அவர்கள் உள்ளூர் மக்களின் நன்மதிப்பையும். காவலர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார். இவர் செய்யும் சமூக சேவை பாராட்டுதலுக்குரியது.