கோவை: கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 18 வருடங்களாக செயின் பறிப்பை ஒரு தொழிலாக செய்து வந்துள்ளனர். இவர்களை தமிழகத்தின் மிகச்சிறந்த ஆய்வாளர் என்று தமிழக முதலமைச்சரின் கையில் சான்றிதழ் பெற்ற சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான தனிப்படையினர் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவலர்கள் ஒரு சிறிய துப்பின் உதவியில் பிடித்தனர். 18 வருடங்களாக செயின் பறிப்பு தொழில் செய்துவந்த கறும்புக்கடை சதாம் உசேன் மற்றும் ஒண்டிப்புதூரில் பிரின்ஸ் ராஜாக இருந்து தற்போது அப்துல்ரகீம் ஆக மாறிய இளைஞர்கள் இருவரையும் சூலூர் போலீசார் மிக திறமையாக பிடித்து அவர்கள் இருவரையும் முதல் முறையாக சிறை களம் அனுப்பினர். குற்றவாளிகளை பிடித்த போது தங்களை பிடித்து விட்டார்களா என அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர்.
தமிழகத்தில் சூலூர் காவல் நிலைய காவலர்களை போல மிக திறமை வாய்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர் உள்ளனர். இருந்தாலும் நமது பகுதி போலீசாருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் கூட என நினைக்கிறேன். மக்கள் சேவையில் உங்கள் வாழ்த்துக்களை பெற்று உற்சாகமாக பணியாற்றும்
சூலூர் வட்ட ஆய்வாளர் மாதையன்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்