கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் அசோக்குமார் (40), பார்மசி படித்துள்ள இவர், ஓசூர் அருகே குமாரனபள்ளி என்ற கிராமத்தில் மருந்தகம் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தாவின் பேரில், ஓசூர் அரசு மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி தலைமையில், மற்றும் அலுவலர்கள், மத்திகிரி போலீசார் அடங்கிய குழு அந்த மருந்தகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது தரியவந்தது. இதையடுத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்















