திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி மகளிர் காவல் நிலைய சரகத்தில், வசிக்கும் வழக்கின் குற்றவாளி, தனது மனைவி மற்றும் குழந்தை இருவரும் இறந்துவிட்டதால் தான் மட்டும் தனியாக வசிப்பதாகவும்இ விவசாயம் செய்து பணம் சேர்த்து புது வீடு கட்டி இருப்பதாகவும், தன் வீட்டின் வழியே பள்ளிக்கு செல்லும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பல நாட்களாக ஆசை வார்த்தை கூறி 05.11.2019 ம் தேதி சிறுமியை வெளியூர் அழைத்து சென்று லாட்ஜில் தங்க வைத்து அங்குள்ள கோவிலில் தாலிகட்டி 4 நாட்களாக கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளார்கள்.
பின் 16.11.2019 ம் தேதி குற்றவாளி சிறுமியை அவர் வீட்டில் விட்டார். சிறுமியின் பெற்றோர்இ இந்த விஷயத்தை பற்றி பெரிது படுத்த விரும்பாத நிலையில், எவரோ Help Line-க்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததால், 11.11.2019 ம் தேதி சிறுமியை காப்பகத்தில் தங்க வைத்தும், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வாசுகி அங்கு சென்று விசாரித்து, 20.11.2019 ம் தேதி புகார் பெற்று முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரிலும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படியும் மேற்கண்ட எதிரியானவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி