திருச்சி : திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை திருமண மண்டபத்தில், திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் , திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் முன்னிலையில், போக்சோ சட்டப்பிரிவு மற்றும் கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட வழக்குகளில், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த, காவல்துறையினர், சட்டப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
மேலும் “திருச்சி சரகத்தில், போக்சோ சட்டம் அமலான கடந்த, 2012ம் ஆண்டு முதல், தற்போது வரை, போக்சோ சட்டத்தில் தண்டனைப் பெற்ற, 222 பேர் சரித்திர பதிவேடு ரவுடிகளாக பதிவுச் செய்யப்பட உள்ளதாகவும், இவர்கள் குறித்த பட்டியல் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், திருச்சி சரகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ‘போலீஸ் கிளப்’ அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,குழந்தைகள் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் மற்றும் பரிமாற்றம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி