கோவை : கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணன் @பழனிசாமி (45). என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று (30.09.2024)-ம் தேதி குற்றவாளி கண்ணன்@பழனிசாமிக்கு 26 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 15,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் திருமதி.கனிமொழி (WPC 1127 ) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்