திருவள்ளூர்: பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. கல்பனா டெட் உத்தரவின் பேரில், பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் கள்ளசாராயம் மற்றும் போலி மது ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஆறுமுகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறித்து விளக்கமளித்தார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கொண்டு செல்லுதல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தலை ஒழிப்பதற்காகவும், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுப்பதற்காகவும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அருகில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ரங்கநாதன், தலைமைக் காவலர்கள் திரு.ஆறுமுகம், திரு.கமலக்கண்ணன் குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சைமன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்