திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. கொண்டகரை ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கொண்டகரை ஊராட்சியும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதி மூலம் தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை நிறுவப்பட்டுள்ளது. அதனை திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ரெட்டி,பயிற்சி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆதர்பசேரா, மற்றும் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், துணைத்தலைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதனையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ரெட்டி, இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காகவும், திருட்டு சம்பவங்களை கண்டுபிடிப்பதற்கும் சிக்னல் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என கூறினர். மேலும் வெளியூர் செல்பவர்கள் தங்களது விவரத்தை, அருகே உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து, செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இதில் ஊராட்சி உதவியாளர் முருகன் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்