திருவள்ளூர்: பொன்னேரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன இதுகுறித்து பொன்னேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் உத்தரவின் பேரில் பொன்னேரி ஆய்வாளர் திரு.வெங்கடேசன், உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் ஆகியோர் தனிப்படை அமைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் வாகன சோதனையில், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்த முனேந்திரா, வீரன் ஆகிய இரண்டு பேர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர்.
பின்னர் மேலும் தீவிர விசாரணை செய்யும் போது, காலையில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம் விட்டு, பின்னர் இரவு நேரங்களில், வந்து பூட்டை உடைத்து திருடி செல்வதாகவும், ஒப்புக் கொண்டனர்.
பின்னர் அவர்களிடமிரந்து 7 சவரன் நகை அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்