திருவள்ளூர்: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்க்கு போலீசார் அபராதம் விதிப்பர் ஆனால் சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு புது உத்தரவை பிறப்பித்தது அதன் படி மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் பொன்னேரி கோட்ட உதவி கண்காணிப்பாளர் திரு,பவன்குமார் உத்தரவின் பேரில், ஆய்வாளர் திரு.வெங்கடேசன், உதவி ஆய்வாளர்கள் திரு.மகாலிங்கம், திரு.சைமன் துரை மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மது அருந்தி விட்டு வேகமாக இரு சக்கர வாகனம் ஒட்டி வந்த பொன்னேரி அருகேயுள்ள திருஆயர்பாடியை சேர்ந்த பிரேம்குமார் (38) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பொன்னேரி கோட்டத்தில் முதல் கைது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்