திருவள்ளூர் : கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் ஆதரவற்ற மக்கள் பொன்னேரி ரெயில் நிலையம். பேருந்து நிலையம் மற்றும் . சாலை ஓரங்களில் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு பொன்னேரி நேதாஜி சமூக சேவை சார்பில் பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உணவு மற்றும் முகக்கவசம் வழங்கினார். அவ்வாறு உணவு வழங்க படுவதற்கு முன்பாக கை கழுவதல் அவசியம் குறித்து விளக்கி கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்து பின்னர் உணவு வழங்கினார். இதில் நேதாஜி சமூக சேவை அமைப்பின் தலைவர் நேதாஜி ஸ்ரீதர் பாபு மற்றும் மன்னார் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்