திருவள்ளூர்: பொன்னேரி உதவி காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் ரெட்டி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணமாக பொன்னேரி ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் பொன்னேரி உட்கோட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தடையை மீறி வாகனங்களில் சென்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் தடையை மீறி வாகனம் ஒட்டிய தாக 37 பேர் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு 28 வாகனங்கள் பறிமுதல் செய்ய பட்டன.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்