சிவகங்கை : ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்களின் உத்தரவின் பேரில் மதகுபட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு. சந்திரன் மற்றும் திரு. கலையரசன் அவர்கள் தலைமையில் காவல் நிலைய போலீசார் இணைந்து மதகுபட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் பற்றியும், தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சாலை விதிகளை மதித்து பின்பற்ற வேண்டும் என்றும், ?.இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்லும் பயணம் ஆபத்தை உண்டாக்கும் என்று எடுத்துரைத்தனர்.
திருப்பத்தூர் காவல் நிலையம்
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்பிபட்டி பைபாஸ் ஜங்ஷன் பகுதியில் திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு பற்றியும், ஹெல்மெட் அணிவதன் பயன்கள் குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு காவலன் SOS செயலியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலூர் சாலைப் பகுதியில் திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து SI திரு.மலைச்சாமி அவர்கள் பொதுமக்களிடையே காவலன் SOS செயலி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும், இச் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்தார்.
சிவகங்கை நகர் காவல் நிலையம்
சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளி பகுதியில் சிவகங்கை நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு பற்றியும், ஹெல்மெட் அணிவதன் பயன்கள் குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு, சிவகங்கை நகர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் குழந்தைகள்,முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
சிவகங்கையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
K. ராமசாமி