திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் சின்னாளபட்டி பகுதியில் பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியில் வருவதை கண்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்கள்.
மேலும் பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வந்து வாங்கி செல்லும்படியும் அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா