மதுரை : சாலை பாதுகாப்பு என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். சாலை பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி விவரத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.10 இலட்சம் மக்கள் விபத்தினால் உயிர் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பில் தடுப்பு அரண் (BARRICADES) அமைக்கப்பட்டது.
பெரும்பாலும் விபத்துக்கள் ஒரு வாகனத்தை மற்றோரு வாகனம் முந்தி கொண்டு செல்வதால் ஏற்படுகின்றது. சாலைகளுக்கு இடையே தடுப்பு அரண் அமைக்கும் போது விபத்துக்கள் குறையும் என்பதில் ஐயமில்லை. மதுரை காவல்துறையினரின் இத்தகைய செயல் பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை