மதுரை : மதுரை மாவட்டத்தில், குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம் ஒன்று பேரையூர் – அம்மாபட்டி செல்லும் வழியில் எஸ்.வி.என் நகரில் ஏற்படுத்தப்பட்டது.
இந்தப் புற காவல்நிலையத்தை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு இன்று திறந்து வைத்தார்கள். திறப்பு விழாவின்போது, மதுரை சரக காவல்துறை துணை தலைவர் காமினி, பாஸ்கரன் காவல் கண்காணிப்பாளர் மதுரை மாவட்டம், சரோஜா காவல் துணைக் கண்காணிப்பாளர் பேரையூர் உட்கோட்டம், பேரையூர் வட்டாட்சியர் கலந்து கொண்டனர்.
இப் புற காவல்நிலையத்தில் காவலர்கள் தொடர்ந்து, பணியில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில், குற்றங்கள் ஏதும் நடவாமல் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்காணிப்பதற்காகவும்
இப் புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
