திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க மாணவர் தன்னுடைய குடும்பத்தினரை பிரிந்து பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு சென்றவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்கள் அழைத்து அவரிடம் விசாரணை செய்ததில் அவரது பெற்றோர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் அவரது தாயார் ஜெயந்தி என்பவர் எனவும் தெரியவந்தது, இதனை அடுத்து காவல்துறையின் துரித நடவடிக்கையால் மாணவர் அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். மாணவரின் பெற்றோர் காவல்துறையினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா